ரோஜர் ஃபெடரர் - ‘கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆனது எப்படி?! #VikatanInfographicSponsoredAge is just a number என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார் டென்னிஸ் பிதாமகன் ரோஜர் ஃபெடரர். 35 வயதில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். டென்னிஸ் உலகில் யாருமே படைக்காத சாதனை. நடுவில் நான்கு ஆண்டுகள் கிராண்ட் ஸ்லாம் வெல்லவில்லை என்றாலும் அவர் மீதான மாஸ் என்றுமே குறைந்ததில்லை. ஃபெடரர் வெல்லாத கிராண்ட் ஸ்லாம் இல்லை; வெற்றி பெற்றதும் விண்ணை முட்டும் ஆர்ப்பரிப்பு இல்லை; அவர் சிரித்தால் ரசிகர்கள் சிரிப்பார்கள். அழுதால் ரசிகர்கள் அழுவார்கள். சச்சின் டெண்டுல்கர் இவருக்காகவே விம்பிள்டன் போட்டிகளைத் தவறவிட மாட்டார். இவையெல்லாம் வேறு எந்த டென்னிஸ் வீரனுக்கும் கிடைக்காத பெருமை. சரி, ஃபெடரர்... ‘கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆனது எப்படி?! 

நேர்த்தியான ஷாட்களால் எதிரே உள்ள வீரரைத் தடுமாறவைப்பது ஃபெடரரின் பியூட்டி. வித்தியாசமான ஷாட்களால் ஸ்கோர் செய்து ஆச்சர்யப்படுத்தும் ஃபெடரர், கடினமான செட்களை கண்ணிமைக்கும் நேரத்தில் தனதாக்கிகொள்ளும் திறன்கொண்டவர். இந்த 14 ஆண்டுகளில் 30 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் ஃபெடரர். அதில் 20 போட்டிகளில் வென்றுள்ளார். தோல்வியடைந்த போட்டிகளில் 4 ஃபிரெஞ்சு ஓப்பன் போட்டிகள். களிமண் தரையின் நாயகன் ரஃபேல் நடாலிடம்தான் அந்தத் தோல்விகளும். 10 கிராண்ட் ஸ்லாம் தோல்விகளில் 6 நடாலுக்கு எதிரானவை. 

Sponsored


Sponsored


`வயதாகிவிட்டது, இனிமேல் ஃபெடரர் முன்புபோல் வெற்றிபெறுவது கடினம்' என்றவர்களுக்கு கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன், விம்பிள்டன் வென்று பதிலடி கொடுத்த ஃபெடரர், இந்த ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன் வென்று, விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார். அன்றும் இன்றும் என்றும் `கிங் ஆஃப் கிராண்ட் ஸ்லாம்’ ஆக வளம்வரும் ஃபெடரர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் அவரது 20 கிராண்ட்ஸ்லாம் வெற்றி முடிவுகளும் இதோ...

ஆஸ்திரேலிய ஓப்பன்

பிரெஞ்ச் ஓப்பன்


 

விம்பிள்டன்

அமெரிக்க ஓப்பன்Trending Articles

Sponsored