``இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது!’’ - டிராவிட்டை புகழ்ந்த நெட்டிசன்கள்Sponsoredஜூனியர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

Photo Courtesy: Twitter/Cricketworldcup

Sponsored


நியூசிலாந்தின் ஹேக்லி ஓவர் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, சுப்மன் கில்லின் அசத்தல் சதத்தின் உதவியால் 272 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் இந்திய வேகங்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. முடிவில் 69 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழக்க, 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி தகுதிபெற்றது. இந்திய அணி தரப்பில் இஷான் போரெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுப்மன் கில் மற்றும் இஷான் போரெல் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார். 

Sponsored


டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய ஜூனியர் அணி, உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 2016-ல் நடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோற்றிருந்தது. இதனால், டிராவிட்டை கிரிக்கெட் ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் புகழ்ந்து வருகிறார்கள். ``இந்திய இளம் வீரர்கள் டிராவிட்டின் வழிகாட்டுதலோடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர், தனது அனுபவம் மூலம் இந்திய அணியின் அடுத்த தலைமுறை அணியை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்’’ என்று நெட்டிசன் ஒருவர் புகழ்ந்துள்ளார். அதேபோல் மற்றொருவரோ, ``இந்தப் போட்டி முழுக்க முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போட்டியாகவே அமைந்தது. இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது. டிராவிட்டுக்கு பாராட்டுகள்’’ என்று பாராட்டியுள்ளார். Trending Articles

Sponsored