`இதுதான் பெஸ்ட்..!' - சி.எஸ்.கே குறித்து நெகிழ்ந்த பிராவோSponsoredஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கப்போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், அணிக்கு முன்னர் விளையாடிய பலரை மீட்டுள்ளது சி.எஸ்.கே. அதில் முக்கியமானவர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ. அவரை 6.40 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் வாங்கியுள்ளது சி.எஸ்.கே. மீண்டும் சென்னை அணிக்கு, தான் விளையாடப்போவது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் பிராவோ.

சென்னை அணியின் கம்-பேக் குறித்தும் மீண்டும் சென்னை அணியில் தான் அங்கம் வகிக்கப்போவது குறித்தும் பிராவோ, `சி.எஸ்.கே-தான் நான் விளையாடியதிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் கிளப். மறுபடியும் மஞ்சள் உடைபோட்டு சி.எஸ்.கே சார்பில் விளையாடப்போவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். மீண்டும் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா போன்றோருடன் விளையாடப்போவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் கம்-பேக் என்பது மிகுந்த ஸ்பெஷலான ஒன்று. பலர் இந்தக் கம்-பேக்கை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சி.எஸ்.கே இல்லாத ஐ.பி.எல் அந்த அளவுக்கு நன்றாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய அளவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் இருக்கும் சி.எஸ்.கே-வின் ரசிகர்களுக்கு, அணியின் ரிட்டர்ன் மிகப் பெரிய ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். இது ஒரு மெகா கிரிக்கெட் கிளப், இது ஒரு மெகா டீம். இந்த டீமை உலகம் முழுவதும் விரும்புகிறார்கள்' என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored