`இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சவால் காத்திருக்கிறது!' - டுமினி கணிப்புதென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ள நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடரில் விளையாடும். பிப்ரவரி 1-ம் தேதி டர்பனில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகும். 

Sponsored


இந்நிலையில் ஒருநாள் தொடர் குறித்து தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டரான ஜே.பி.டுமினி கருத்து தெரிவித்துள்ளார். டுமினி, `இந்தியா, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நன்றாக விளையாடி வருவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவிலும் அவர்கள் அப்படியே விளையாடியுள்ளனர். இப்போது, இந்திய அணியில் பல புதுமுகங்கள் வந்துள்ளன. ஆனால், அவர்களிடம் திறமைக்குப் பஞ்சம் இல்லை. டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்தபோதும், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரும் 20 ஓவர் தொடரும் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும்' என்று ஆரூடம் கூறியுள்ளார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored