`மிகநீண்ட தொடர் வீரர்களைப் பெரிதும் பாதிக்கிறது!' - ரோகித் ஷர்மா தகவல்



Sponsored



தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ள நிலையில், அடுத்ததாக ஒரு நாள் தொடரில் விளையாடும். இரண்டு மாதங்கள் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் முடிந்தவுடன், இங்கிலாந்துக்குச் செல்ல உள்ளது இந்திய அணி. அங்கும் மீக நீண்ட நாள்கள் தங்கி கிரிக்கெட் விளையாட உள்ளது. இப்படிப்பட்ட நீண்ட தொடர்களைப் பற்றி தற்போது விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா இது குறித்துப் பேசியுள்ளார். 

ரோகித், `வெளிநாடுகளில் பல மாதங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடுவது குறித்து தொடர்ச்சியாகப் பேசப்பட்டுதான் வருகிறது. ஒரு வகை கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு, பின்னர் சொந்த நாட்டுக்குத் திரும்பி மீண்டும் வருவது குறித்தும் பலர் பேசி வருகின்றனர். ஆனால், வெளிநாட்டு அணிகள், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு வகைப் போட்டியில் மட்டுமே விளையாடி நாடு திரும்பிவிட்டு, மீண்டும் வந்து சுற்றுப் பயணத்தைத் தொடர்வது நடைமுறையாக இருக்கிறது.  ஆனால், இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, எப்போதுமே மொத்தத் தொடரையும் ஒன்றாக விளையாடுவதுதான் நடைமுறை. ஒரே மூச்சில் மொத்தத் தொடரையும் விளையாடுவது, வீரர்களை உடல் அளவில் பெரிதும் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த நடைமுறை தீர்மானிப்பது பிசிசிஐ-தான். ஆனால், வீரர்களுக்கு ஒரு வகை கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடுவதுதான் விருப்பமாக இருக்கிறது. பிறகு, சொந்த நாட்டுக்குச் சென்று புத்துணர்வு பெற்று மீண்டும் வந்து சுற்றுப் பயணத்தைத் தொடர வேண்டும். ஆனால், மிக நீண்ட தொடர்களை விளையாடுவதற்கு நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம்' என்று விளக்கினார். 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored