புதிய சி.எஸ்.கே பிடிச்சிருக்கா... பிடிக்கலையா...? சர்வே முடிவுகள் #VikatanSurveyResults #cskSponsoredCSK கம்பேக்... தோனி கேப்டன்... ரெய்னா, ஜடேஜா ரீடெய்ன் என விசில் பறந்துகொண்டிருந்த சென்னை இந்த வாரம் கொஞ்சம் 'டல்'லாகி விட்டது. ஏலத்தில் வழக்கம்போல் பலமான சென்னை அணி உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை ரசிகர்கள், 30+ வீரர்களை அதிகமாக வாங்கியதில் நொந்துவிட்டனர். அவர்களிடம், 'சென்னை அணியின் புதிய டீம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?' என்ற தலைப்பில் நடந்த சர்வேயின் முடிவுகள் இதோ...

புதிய சி.எஸ்.கே திருப்தியில்லை

Sponsored


ஏலம் நடந்த சனி, ஞாயிறு இரு நாள்களும், சென்னை வீரர்களின் வயதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளினார்கள் சென்னை ரசிகர்கள். 35 வயது வாட்சன், 37 வயது ஹர்பஜன், 38 வயது தாஹிர் என அணியில் சீனியர்கள் நிறைந்திருந்ததே காரணம். இந்த சர்வேயிலும் அதுவே வெளிப்பட்டுள்ளது. 70.8 சதவிகிதம் ரசிகர்களுக்கு ஏலத்தில் சி.எஸ்.கே-வின் செயல்பாடு பிடிக்கவில்லை. 

Sponsored


வேகப்பந்துவீச்சு பெரிய பிரச்னை

'சென்னை அணியின் பிரச்னை என்ன?' என்ற கேள்விக்கு வேகப்பந்துவீச்சு என 64.8 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். எங்கிடி, மார்க் வுட், பிராவோ, வாட்சன் தவிர்த்து அனுபவமுள்ள பௌலர்கள் யாரும் இல்லாததே இதன் காரணம். உள்ளூர் வீரர்கள் அனுபவமற்றவர்களாக இருப்பது 35.2 சதவிகித ரசிகர்களுக்குப் பிரச்னையாகத் தோன்றுகிறது.

சென்னை அஷ்வினை மிஸ் செய்யும்

முந்தைய சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய வீரர்களில் அஷ்வின் சென்னை அணியால் ரொம்பவும் மிஸ் செய்யப்படுவார் என்று 54.2 சதவிகிதம் ரசிகர்கள் கூறியுள்ளனர். 41.2 சதவிகிதம் பேர் மெக்கல்லம் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். டுவைன் ஸ்மித் 4.7 சதவிகித ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். ஓப்பனங்கில் விளையாட ஷேன் வாட்சன் இருப்பதால், ஸ்மித் அநேகம் பேருக்குப் பெரிய இழப்பாகத் தோன்றவில்லை. 

தமிழக வீரர்கள் இல்லாதது ஏமாற்றம்தான்

ஏலத்துக்கு முன்பாகவே சென்னை ரசிகர்கள் 'இவர்களையெல்லாம் சென்னை அணி வாங்கும்' என நினைத்திருந்தார்கள். ஆனால், ஏலத்தில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும், அஷ்வினை வாங்காதது 38.7 சதவிகிதம் பேருக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது. 33.7 சதவிகிதம் பேர் வாஷிங்டன் சுந்தர் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக வீரர் என்பதால் இவரை சி.எஸ்.கே வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 27.6 சதவிகித ரசிகர்களின் சாய்ஸ் மெக்கல்லம்.

இவருக்கு எதுக்கு 5 கோடி

ஜடேஜா தக்கவைக்கப்பட்டிருந்தார். ஏலத்தில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் வாங்கப்பட்டனர். ரெய்னா - நல்ல பார்ட் டைம் பௌலர். இத்தனை ஸ்பின் ஆப்ஷன்கள் வைத்துக்கொண்டு கர்ன் ஷர்மாவுக்கு 5 கோடி கொடுத்தது சி.எஸ்.கே. இதை 55 சதவிகித சென்னை ரசிகர்கள் விரும்பவில்லை. அவருக்கு அடுத்த படியாக, 30.5 சதவிகிதம் பேர் கேதர் ஜாதவுக்கு 7.80 கோடி ரூபாய் கொடுத்தது தேவையற்றது என நினைக்கிறார்கள்.

ஸ்டோக்ஸை விட்டுக் கொடுத்திருக்கூடாது...!

ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், உனத்கட், ஆண்ட்ரூ டை, அஷ்வின் என பலருக்கும் சென்னை அணி ஏலம் கேட்டது. ஆனால், தொகை அதிகமாகப் போனதால், பின்வாங்கியது. அவர்களுள் யாரை சென்னை விட்டுக்கொடுத்திருக்கக்கூடாது என்று கேட்டதற்கு 51.8 பேர் தெர்ந்தெடுத்த பெயர் ஸ்டோக்ஸ். ஃபாஸ்ட் பௌலர்கள் அதிகம் இல்லாததால், உனத்கட் அணிக்கு பலம் சேர்த்திருப்பார். அதனால் 30.1 சதவிகித ரசிகர்கள் அவரைத் தேர்வு செய்துள்ளனர். 

பிராவோ ஸ்மார்ட்!

சென்னை அணியின் மிக முக்கிய ஆயுதம் பிராவோ. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடிய மேட்ச் வின்னர். சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களெல்லாம் 7,8 கோடி வரை போன நிலையில், 6.4 கோடிக்கு பிராவோ சென்னை அணியால் வாங்கப்பட்டார். சென்னை அணியின் ஸ்மார்ட் மூவ் இதுதான் என்று 53.2 சதவிகிதம் பேர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்ற லுங்கிசானி எங்கிடி 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டது நல்ல மூவ் என்று 39.7 சதவிகிதம் பேர் கருதுகிறார்கள்.

சன்ரைஸர்ஸ்தான் பலமான டீம்

சென்னையை விட பலமான அணி எது என்ற கேள்விக்கு, சன்ரைஸர்ஸ் அணிதான் என 37.5 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். அந்த அணி வழக்கம்போல் பௌலிங், பேட்டிங் இரண்டிலும் முழு பலத்துடன் இருக்கிறது. 35 சதவிகித ஓட்டுகளுடன் பெங்களூரு அடுத்த இடத்தில் உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, அந்த அணியின் பௌலிங் இந்த முறை பலமாக இருக்கிறது. 27.5 சதவிதம் பேரின் சாய்ஸ் - டேர்டெவில்ஸ்!

சென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...Trending Articles

Sponsored