கங்குலியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி..!Sponsoredஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக சதங்களைக் கடந்த சவுரவ் கங்குலியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 269 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரஹானேவின் அசத்தல் ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.

Sponsored


அதன், மூலம் சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக அதிகபட்சமாக கங்குலி இதுவரையில் 11 சதம் அடித்துள்ளார். நேற்று, கோலி சதம் அடித்ததன் மூலம் அதனைச் சமன் செய்துள்ளார். 142 போட்டிகளில் கங்குலி 11 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 41 போட்டிகளிலேயே 11 சதம் அடித்துவிட்டார். கோலி, இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் 33 சதம் அடித்துள்ளார். அதில், இரண்டாவது பேட்டிங்கின்போது 20 சதங்கள் அடித்துள்ளார். அதில், 18 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறை சதம் அடிக்கும்போது, கோலி ஏதேனும் ஒரு சாதனை படைத்துவருகிறார். 

Sponsored
Trending Articles

Sponsored