``இந்தியாவை வெற்றிபெற வைத்த 2 பாட்னர்ஷிப்புகள்!’’ - விராட் படைக்கு சச்சின் வாழ்த்துSponsoredதென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. கேப்டன் டுபிளசி 120 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் சஹால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 270 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கேப்டன் கோலி மற்றும் ரஹானே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 45.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. கேப்டன் விராட் கோலி 112 ரன்களும் ரஹானே 79 ரன்களும் எடுத்தனர். 

Sponsored


இந்தநிலையில், இந்திய அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``இரண்டு பாட்னர்ஷிப்புகள் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றன. முதலில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் கூட்டணி, இரண்டாவது விராட் கோலி, அஜிங்கியா ரஹானே கூட்டணி. வெற்றி தொடரட்டும்’’ என்று வாழ்த்தியுள்ளார். 

Sponsored Trending Articles

Sponsored