சேஸிங் விராட், க்ளாஸிக் ரஹானே, கன்ட்ரோல் குல்தீப்... டர்பன் வெற்றியின் சுவாரஸ்யங்கள்!விராட் கோலி குறைந்த போட்டிகளில் சதமடித்து முன்னேறுகிறார், அவர் சதமடிக்காத எதிரணியே கிடையாது என்பது தான் இது நாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி விராட் எல்லா நாடுகளிலும் அந்த நாடுகளுக்கு எதிராக சதமடித்துள்ளார் என்ற சாதனையும் நிகழ்த்தியிருக்கிறார். இதனை இதற்கு முன் சர்வதேச அரங்கில் இரண்டு வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

சச்சினும், ஜெயசூர்யாவும் மட்டும்தான் 9 நாடுகளில் சதமடித்துள்ளனர். ஆனால், சச்சின் மேற்கிந்திய தீவுகளிலும், ஜெயசூர்யா ஜிம்பாவேயிலும் சதமடிக்கவில்லை. ஆனால், கோலி அப்படியில்லை. தான் சென்று கிரிக்கெட் ஆடிய 9 நாடுகளிலும் சதமடித்துள்ளார். அவர் சதமடிக்காத ஒரே நாடு பாகிஸ்தான் மண் மட்டும்தான். ஏனென்றால், அவர் இந்திய அணிக்காக ஆடத் தொடங்கியதிலிருந்து ஒருமுறை கூட இந்தியா, பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆட செல்லவில்லை. 

Sponsored


                          

Sponsored


இதில் சச்சின் சாதனை சமன் என்றால் இன்னொரு சைலண்ட் சாதனயையும் விராட் சமன் செய்துள்ளார். கங்குலி கேப்டனாக இருந்தபோது 142 போட்டிகளில் 11 சதங்கள் அடித்திருந்தார்.இந்த சாதனையை வெறும் 41 போட்டிகளில் சமன் செய்துள்ளார் கோலி. ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 33 சதங்களை விளாசியுள்ளார். சேஸிங்கில் மட்டும் 20 சதங்கள்.

Sponsored


க்ளாஸிக் ரஹானே:

நேற்று நடந்த போட்டியில் 86 பந்துகளில் 79 ரன்களை குவித்து தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்த மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை எட்டியுள்ளார் ரஹானே. ராகுல் டிராவிட், சச்சின், கோலி ஆகியோர் தொடர்ந்து 5 அரைசதங்களை விளாசியுள்ளனர். வெளிநாட்டு ஆடுகளங்களில் ரஹானே டான் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.

தல - தளபதி பார்ட்னர்ஷிப்:

கோலி - ரஹானே ஜோடி ஸ்டைலிஷாக ஆடி மூன்றாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தனர். இது தென்னாப்ரிக்காவுக்கு எதிராக குவிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச பாட்னர்ஷிப்! கடந்த ஆண்டு தென்னாப்ரிக்காவிற்கு எதிராக கப்தில் - ராஸ் டெய்லர் ஜோடி  180 ரன்கள் குவித்ததே மூன்றாவது விக்கெட்டுக்கான அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக இருந்தது . இதனை கோலி-ரஹானே முறியடித்தனர்.

வேகத்தை வீழ்த்திய சுழல்:

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான தென்னாப்பிரிக்க பிட்சுகளில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களையே திக்குமுக்காட வைத்தனர் குல்தீப் மற்றும் சஹால். இந்தியாவின் ஸ்பின்னர்கள் இருவரும் இணைந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

சஹால்-குல்தீப் இணைந்து ஓவருக்கு 3.95 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர். அதே நேரத்தில் தென்னாப்ரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர்கள் (தாகீர்,டுமினி,மார்க்ரம்) 14 ஓவர்கள் வீசி 87 ரன்கள் கொடுத்தது மட்டுமல்லாமல் விக்கெட்டுகள் ஏதும் எடுக்கவில்லை. 

                                       

டாட் சொன்ன கோலி அண்ட் கோ:

டர்பனில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி பெரும் முதல் வெற்றி இது. தென்னாப்ரிக்கா அணி தன் சொந்த மண்ணில் தொடர்ந்து 17 வெற்றிகளை பெற்றிருந்தது. தென்னாப்ரிக்காவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 'கெத்து'க் காட்டியுள்ளது இந்திய அணி! Trending Articles

Sponsored