`மிடில் ஆர்டரில் சாதிப்பேன்!' - நம்பிக்கையில் ரஹானேSponsoredதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் மட்டும்தான் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பிலும் அவர் 48 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு துணை புரிந்தார். முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் அரைசதம் அடித்துள்ளார். ஓபனராக இருந்த ரஹானே தற்போது மிடில் ஆர்டரில் கலக்க தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் விளக்கமாக பேசியுள்ளார். 

ரஹானே, `இப்போது நான் 4-வது இடத்தில் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறேன். அந்த இடத்தில் விளையாடுவதற்கு ஏற்றாற் போல பக்குவமடைந்துள்ளேன். முதல் இரண்டு இடங்களில் பேட்டிங் இறங்கி விளையாடுவது எனக்கு பிடித்தமான விஷயம்தான். ஆனால், உங்கள் நாட்டுக்கு நீங்கள் விளையாடும்போது எந்த இடத்தில் இறக்கிவிடப்பட்டாலும் சிறப்பான ஆட்டத்தைத் தர வேண்டும். அதைத்தான் நான் செய்வேன். முதல் இரண்டு இடங்களில் இறங்கி விளையாடுவதற்கும், நான்காவது இடத்தில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால், நான்காவதாக களம் கண்டு நன்றாக விளையாடுவதற்கு நான் தீர்க்கமாக இருக்கிறேன். ஏனென்றால், 2015 உலகக்கோப்பையின் போதும் மற்றும் சில தொடர்களிலும் நான் நான்காவதாகத்தான் இறங்கினேன். தனிப்பட்ட முறையில் நான்காவதாக களமிறங்கி விளையாடுவதை நான் விரும்புகிறேன். அதை எதிர்காலத்திலும் சிறப்பாபவே செய்வேன்' என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored