இந்தியன் ஓப்பன் பேட்மின்டன்: சிந்துவுக்கு வெள்ளிSponsoredஇந்தியன் ஓப்பன் சீரீஸ் பேட்மின்டன்  இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர், அமெரிக்க வீராங்கனை பெய்வன் சாங்கிடம் 21-18,11-21,21-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். 


மற்ற இந்திய வீரர்கள்  அனைவரும் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறியதால், நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் சிந்துவின் மேலேயே இருந்தது. அவர், காலிறுதிச் சுற்றில் 36-ம் நிலை வீராங்கனை பெட்ரிஸ் கார்லெஸை வீழ்த்தியபோது அதில் செலுத்திய உத்வேகத்தையும் பின் அரை இறுதியில்  உலகத் தர வரிசையில் மூன்றாம் நிலையில் உள்ள தாய் வீராங்கனை ரட்சனோக் இன்டனோனை நேர் செட்களில் அவர் தோற்கடித்த விதமும், அவருக்கான எதிர்பார்ப்பைப் பல மடங்கு உயர்த்தியது.
அதற்கேற்ப இறுதிப்போட்டியிலும் ஒவ்வொரு புள்ளியையும் கவனமாக ஆடி, கடைசி செட் 21 புள்ளி வரை சமமாகி அனைவரையும்  உற்சாகமூட்டியவர் சிந்து. என்றாலும் அவரால் வெற்றிபெற இயலவில்லை. வெள்ளிப்பதக்கத்தோடு திருப்திப்பட வேண்டியதாயிற்று. 
பணத் தட்டுப்பாட்டால் தன் பயிற்சியாளரைத் தன்னோடு அழைத்து வர இயலாத நிலையில் சாங் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்தான் காலிறுதியில் இன்னொரு இந்திய நட்சத்திரம்  சாய்னாவை நேர் செட்களில் தோற்கடித்தவர். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored