வாழ்நாள் தடைக்கு எதிராக ஸ்ரீசாந்த் மேல்முறையீடு! - பி.சி.சி.ஐ பதிலளிக்க உத்தரவு



இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர், ஸ்ரீசாந்த். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது, இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

Sponsored


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த்தை கைதுசெய்தது. இதனால், பி.சி.சி.ஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், 'ஸ்ரீசாந்த்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை' எனக்கூறி விடுவிக்கப்பட்டாலும், அவரின் மீதான  வாழ்நாள் தடையை மட்டும் பி.சி.சி.ஐ நீக்கவில்லை. இதனால், பி.சி.சி.ஐ-யின் முடிவுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில், ஸ்ரீசாந்த்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கி, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பி.சி.சி.ஐ மேல்முறையீடுசெய்தது. 

Sponsored


இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.சி.சி.ஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர் நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடை நீக்க உத்தரவை ரத்துசெய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, இதை எதிர்த்து, ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கிடையே ஸ்ரீசாந்த்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ-க்கு உத்தரவிட்டுள்ளது. 

Sponsored




Trending Articles

Sponsored