`மணிக்கட்டில் காயம்’ - இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டிகாக் விலகல்!Sponsoredஇடது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டிகாக், இந்திய அணிக்கெதிரான மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Photo Courtesy: Twitter/OfficialCSA

Sponsored


தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள்கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் டிவிலியர்ஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், கேப்டன் டு பிளசி கைவிரல் எலும்பு முறிவால் இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, இளம் வீரர் மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். 

Sponsored


இந்தநிலையில், காயம் காரணமாக விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக்கும் காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையி, ``2 வது ஒருநாள் போட்டியின்போது, இடது கை மணிக்கட்டு பகுதியில் டிகாக் காயமடைந்தார். காயத்திலிருந்து அவர் குணமடைய 2 முதல் 4 வாரங்கள் ஆகும். மார்ச் மாதத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடருக்குள் அவர் காயத்திலிருந்து மீண்டு விடுவார் என்று நம்புகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. டுபிளசிக்குப் பதிலாக ஃபர்ஹான் பகார்டியன் மாற்றுவீரராக அறிவிக்கப்பட்டபோதே மாற்று விக்கெட் கீப்பராக ஹெயின்ரிச் கிளாசின் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 Trending Articles

Sponsored