`டெஸ்ட்டில் விளையாடுவதுதான் உச்சபட்ச இலக்கு!' - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிஞ்சர் ஓய்வு பெற்றார்!Sponsoredஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டௌக் போலிஞ்சர் அனைத்து வகை சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


போலிஞ்சர் 2002-ம் ஆண்டு, முதல்தர கிரிக்கெட்டை ஆட ஆரம்பித்தார். 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி சார்பில் டெஸ்ட்டில் ஆறிமுகமாகி விளையாடினார். 36 வயதாகும் போலிஞ்சர் 12 டெஸ்ட் போட்டிகள், 39 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வெறும் 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் போலிஞ்சர், 50 விக்கெட்டுகளை 25.92 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். மேலும், அவர் 39 ஒரு நாள் போட்டிகளில் 23.9 சராசரியுடன் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறைவான காலமாக இருந்தாலும் நிறைவான ஆட்டத்தைப் போலிஞ்சர் வெளிப்படுத்தியுள்ளார் என்பதே அவரின் ஸ்டேட்ஸ் காண்பிக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் களமிறங்கி அவர் கலக்கியதால் சென்னை மக்கள் மத்தியிலும் இந்திய மக்கள் மத்தியிலும் அவர் கவனம் பெற்றார். இந்நிலையில் அவர் அனைத்துத் தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும், தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

Sponsoredபோலிஞ்சர், `ஸ்டீவ் வாக், மைக்கெல் கிளார்க், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்களுக்கு கீழ் நான் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது மிகச் சிறந்த ஒரு பயணமாக இருந்தது. பல சிறந்த மனிதர்களை இந்தப் பயணத்தில் நான் சந்தித்திருக்கிறேன். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் விளையாட வேண்டும் என்ற எனது உச்சபட்ச இலக்கையும் இந்தப் பயணத்தில் நான் அடைந்துள்ளேன்' என்று பெருமிதத்துடன் ஓய்வு குறித்துப் பேசியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored