’வயது வெறும் நம்பரே!’ - 51 வயதிலும் வேகப்பந்துவீச்சில் அசத்தும் வாசிம் அக்ரம்Sponsoredபாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், 51 வயதில் கண்காட்சிக் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தினார். 

உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வாசிம் அக்ரம். `கிங் ஆஃப் ஸ்விங்’ மற்றும் `சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்படும் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில், 1985-ல் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், முதன்முதலில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இவர் 2003-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் படைத்தார். அதே ஆண்டு மார்ச் 4-ம் தேதி, ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியே இவர் கடைசியாக விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டியாகும். 

Sponsored


இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பாகிஸ்தானில் கண்காட்சிக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வாசிம் அக்ரம், பந்துவீசினார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரைப் பிரபலப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற அந்த காட்சிப் போட்டியில், வாசிம் அக்ரமின் சுல்தால் லெவன் அணியும், சோயப் மாலிக்கின் டூஃபான் லெவன் அணியும் மோதின. 10 ஓவர்கள் மட்டுமே அந்தப் போட்டியில் அக்ரமின் பந்துவீச்சை எதிர்கொள்ள, சோயப் மாலிக் மற்றும் இம்ரான் நசீர் ஆகியோர் திணறினர். வாசிம் அக்ரம் பந்துவீச்சில் சோயப் மாலிக், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 51 வயதான வாசிம் அக்ரமின் பந்துவீச்சை, நெட்டிசன்கள் பலரும் பாராட்டிவருகின்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored