பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்! - பி.சி.சி.ஐ-க்கு சச்சின் கடிதம்Sponsoredபார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் ஆணையத்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதில் விளையாடும் வீரர்களைக் கிரிக்கெட் வாரியத்தின் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார். 

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற பார்வையற்றவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தநிலையில், பி.சி.சி.ஐ சேர்மன் வினோத் ராய்க்கு சச்சின் டெண்டுல்கர் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'தொடர்ச்சியாக நான்காவது முறையாகப் பார்வையற்றவர்களுக்கான இந்தியக் கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை வெற்றியை நாம் கொண்டாடிவருகிறோம். பார்வையற்றவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐயை நான் வலியுறுத்துகிறேன்.

Sponsored


அந்த அணி பல்வேறு தடைகளைத் தாண்டி, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு விளையாடிவருகின்றனர். அவர்களுடைய வெற்றி நமக்கு உத்வேகம் அளிப்பதோடு, மனித மனதின் அளவற்ற சக்தியை நமக்கு உணர்த்துகிறது. இந்தப் பார்வையற்ற விளையாட்டு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ முன்னர் தகுந்த ஆதரவு வழங்கியது என்பதை நினைவுபடுத்துகிறேன். அதேபோன்ற ஆதரவை இப்போதும் வழங்க பரிசீலிக்க வேண்டும். ஏற்கெனவே 2014-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை அந்த அணி வெற்றிபெற்றது. இது இந்தியாவுக்கான இரண்டாவது மிகப்பெரிய வெற்றி. பார்வையற்றவர்களுக்கான அணிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு இந்த நேரம் சரியானதாகும்.

Sponsored


பி.சி.சி.ஐ ஓய்வூதியத் திட்டத்தில் அவர்களைக் கொண்டுவருவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். நீண்ட காலத்துக்குப் பொருளாதார பாதுகாப்பைப் பெறுவதற்கு அது உதவும். அவர்களுக்கு பி.சி.சி.ஐ அங்கீகாரம் அளிப்பது, அனைத்து விளையாட்டுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொண்டாட்டத்தையும் அளிக்கும். இந்த முயற்சி, இன்னும் பலர் விளையாட்டுத்துறையில் ஆர்வம் செலுத்துவதற்கு உத்வேகம் அளிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.Trending Articles

Sponsored