விராட் கோலி அதிரடி..! இந்திய அணி 303 ரன்கள் குவித்ததுSponsoredதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. 


இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக, ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காதநிலையிலேயே காகிஷோ ராபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

Sponsored


Sponsored


அடுத்ததாக கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். விராட்கோலி, ஷிகர் தவான் இணை, தென்னாப்பிரிக்க பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய, ஷிகர் தவான் 76 ரன்களைக் குவித்தநிலையில் டுமினி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி, 100 ரன்களைக் கடந்தார். தொடர்ந்து விராட்கோலி அதிரடியாக ஆடினார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்தது.Trending Articles

Sponsored