ஐ.சி.சி. இயக்குநரானார் இந்திரா நூயிSponsoredசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சியின் முதல் பெண் இயக்குநராக பெப்சி நிறுவன சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஐ.சி.சியின் தன்னாட்சி பெற்ற இயக்குநரை தேர்வு செய்வதற்கான வாரியக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திரா நூயியை இயக்குநராகத் தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அவர் வரும் ஜூன் மாதம் பொறுப்பேற்பார். அவருடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு மேலும் 2 முறை அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க முடியும். அந்தவகையில் அவர் மொத்தம் 6 ஆண்டுகாலம் ஐ.சி.சி இயக்குநராகப் பதவி வகிக்கலாம். 

ஐ.சி.சியின் இயக்குநராகப் பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இயக்குநராகத் தேர்வாகியிருப்பது சந்தோஷமளிப்பதாகவும், ஐ.சி.சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் இந்திரா நூயி கூறியுள்ளார். “ஐ.சி.சியின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இந்திரா நூயியின் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும். பெண் ஒருவர் இந்தப் பொறுப்புக்குத் தேர்வாகி இருப்பது சிறப்புக்குரியது” என்று ஐ.சி.சி தலைவர் ஷஷாங்க் மனோகர் கூறியிருக்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored