சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 62 சதங்கள் குவிப்பார்! - சேவாக் கணிப்பு



தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 6-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதமடிக்க, இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Sponsored


Photo: Twitter/ICC

Sponsored



இந்தப் போட்டியில் 96 பந்துகளில் 129 ரன்கள் எடுத்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 35-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 5-1 என்ற கணக்கில் வென்று, தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் ஒருநாள் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. 

Sponsored


இந்த நிலையில், போட்டிக்குப் பின்னர் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். `விராட் கோலி, தனது ஒருநாள் போட்டி கேரியரில் எத்தனை சதமடிப்பார்’ என்று ரசிகர் ஒருவர் சேவாக்கிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு, விராட் கோலி 62 சதங்கள் அடிப்பார் என்று சேவாக் பதிலளித்திருந்தார். அதேபோல், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்ட சேவாக், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்றது, தனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், தமிழக மக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த சேவாக், ``நான் தமிழ்நாட்டை விரும்புகிறேன். தமிழக மக்கள் அற்புதமானவர்கள். 2008-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முச்சதம் மற்றும் அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் என சென்னை குறித்து நினைத்துப் பார்க்க சிறப்பான தருணங்கள் பல இருக்கின்றன. ரொம்ப நல்ல, அற்புதமான அண்ணா, அக்கா’’ என்று சிலாகித்தார்.    



Trending Articles

Sponsored