பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சோயப் அக்தருக்கு முக்கிய பதவிகள்!



பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் 2 முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

Sponsored


பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர், அந்நாட்டு தேசிய அணிக்காக 14 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தூதுவர் மற்றும் கிரிக்கெட் விவகாரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரின் ஆலோசகர் என 2 முக்கியமான பதவிகள் சோயப் அக்தருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேதி வெளியிட்டார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சோயப் அக்தர், ``பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து பணியாற்ற என்னைத் தேர்வு செய்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் விளையாடிய காலத்தில் இருந்தது போலவே தற்போதும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

Sponsored


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேதிமீது ஒரு காலத்தில் கடுமையான விமர்சனங்களை அக்தர் முன்வைத்திருந்தார். ``நஜாம் சேதி தலைமையின்கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழிவுப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தான், கிரிக்கெட் வாரியத் தலைவராகப் பதவி வகித்து வருகிறேன், மாறாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கடந்த 2013-ல் அக்தர் விமர்சித்திருந்தார். அதேபோல், 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தபோது, அதற்குக் காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மோசமான வீரர்கள் தேர்வுதான் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். 
 

Sponsored




Trending Articles

Sponsored