``தென்னாப்பிரிக்க வேகம் எங்கிடிக்கு இந்திய ரசிகரின் வித்தியசமான கிஃப்ட்!’’ - வைரல் வீடியோSponsoredமலையாளத் திரைப்படமான 'ஒரு அடார் லவ்' படத்தின் 'மாணிக்க மலராய பூவி' பாட்டின் மூலம் ஒரே இரவில் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். 

அந்தப் பாடலில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தாலும், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களை பிரியா கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கிடைத்தார்கள். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது தனிக்கதை. 

Sponsored


Sponsored


பிரியாவின் எக்ஸ்பிரஷன்களை வைத்து சமூக வலைதளங்களில் எண்ணற்ற ட்ரோல் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் வடிவேலு வரை பல ட்ரோல் வீடியோக்கள் வெளிவந்துள்ளன. தற்போது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுங்கி எங்கிடியையும் பிரியா வாரியர் விட்டுவைக்கவில்லை. ட்விட்டரில் காதலர் தின வாழ்த்து சொன்ன இந்திய ரசிகர் ஒருவர், உங்களுக்கு ஒரு கிஃப்ட் என்று  எங்கிடி, பிரியா வாரியரின் எக்ஸ்பிரஷன்களை இணைத்து ட்ரோல் வீடியோ ஒன்றை அனுப்பினார். இதைப்பார்த்த எங்கிடி ஸ்மைலி மூலம் இந்திய ரசிகருக்கு ரிப்ளை செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.Trending Articles

Sponsored