``ரெய்னா ரிட்டர்ன்ஸ்'’ - டி20 தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?Sponsoredஇந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இழந்தாலும், ஒருநாள் தொடரை 5 -1 என்ற கணக்கில் வென்று சரித்திரம் படைத்தது. 

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா மண்ணில் தொடரை வென்றதில்லை என்ற நீண்டகால குறையை விராட் கோலி தலைமையிலான அணி போக்கியது. இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. டி20 போட்டிகளில் இரு அணிகளும் கில்லி என்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஓராண்டுக்குப் பின்னர் இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார். கடைசியாக பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கிய அவர், முதல் டி20-யில் விளையாடுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Sponsored


இந்திய அணியின் பௌலிங் பக்காவாக இருந்தாலும், பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் சொதப்பி வருகிறது. ஒருநாள் தொடரில், இந்திய அணி பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் போனதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே காரணம் என்று கூறலாம். மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் இந்திய அணிக்கு சுரேஷ் ரெய்னா வருகை கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், கோலி மற்றும் தவான் ஆகியோர் உச்சகட்ட பார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும். இந்த போட்டியில் 44 ரன்கள் எடுப்பதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2,000 ரன்கள் எடுக்கும் மூன்றாவது வீரர் என்ற சாதனையை இந்தியக் கேப்டன் விராட் கோலி படைப்பார். முன்னதாக மெக்கல்லம் மற்றும் கப்தில் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored