``புதிய வேகக் கூட்டணியோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா!’’ - முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்Sponsoredஇந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுமினி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், ஒருநாள் தொடரை 5 -1 என்ற கணக்கில் வென்று சரித்திரம் படைத்தது. இந்தநிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது

Sponsored


ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஜே.பி.டுமினி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே மற்றும் உனத் கட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், சுழற்பந்துவீச்சாளர்களில் சாஹலுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில், காயம் காரணமாக டிவிலியர்ஸ் இந்த போட்டியில் விளையாடவில்லை. டுமினி தலைமையிலான அந்த அணியில் பஹார்டியன், டேன் பேட்டர்சன், டாலா மற்றும் டப்ரைஸ் ஷாம்ஸி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மோர்னே மோர்கல், எங்கிடி உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.  
 

Sponsored
Trending Articles

Sponsored