`நானும் ஜோக்தான் அடிச்சேன்!’ வைரலாகும் அஷ்வின் - கிப்ஸ் ட்விட்டர் உரையாடல்!Sponsored"சூதாடித்தான் வாழ வேண்டும் என்ற நிலை எனக்கு வரவில்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், தென்னாப்பிரிக்க அணி முன்னாள் வீரர் ஹார்ஷ்லே கிப்ஸை நகைச்சுவையாக ட்விட்டரில் சாடிய சம்பவம் தற்போது  டிரெண்டாகி வருகிறது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷூ ஒன்று குறித்து பதிவிட்டிருந்தார். அஷ்வினின் இந்தப் பதிவுக்குத் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹார்ஷலே கிப்ஸ், ``இனிமேலாவது நீங்கள் வேகமாக ஓடுவீர்கள் என்று நம்புகிறேன் அஷ்வின்" என்று பதிவிட்டிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில், "ஆம். என்னால் தங்களது வேகத்தில் ஓட முடியாது தான். ஆனால். கிரிக்கெட்டில் சூதாடிதான் உணவு சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அஷ்வின் பதில் கொடுத்திருந்தார். 

Sponsored


இதற்கு, "ஒரு ஜோக்கை ஜோக்காகப் பார்க்க முடியவில்லை... நான் செல்கிறேன்" என்று கிப்ஸ் சொல்ல, இதற்குப் பதில் அளித்த அஷ்வின், " நானும் இதை ஜோக் என்று நினைத்தே கூறினேன். ஆனால், நீங்களும் மற்றவர்களும் (ட்விட்டர் ஃபாலோயர்ஸ்) இதை வேறு மாதிரிப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நாம் என்றாவது இதைப் பற்றி நேரில் பேசலாம்" என்று கூறி அஷ்வின் வாதத்தை முடித்து வைத்தார். அஷ்வின் மற்றும் கிப்ஸ் இடையிலான இந்த ட்விட்டர் உரையாடல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. 

Sponsored


ஹான்ஸி குரேனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கிப்ஸுக்கு 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடையும் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Trending Articles

Sponsored