மனீஷ் பாண்டே, தோனி அதிரடி!- இந்திய அணி 188 ரன்கள் குவிப்புSponsoredஇந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்செய்து விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. இப்போது, இரு அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. 

அதன்படி, துவக்க வீரர்களாக தவான், ரோஹித் களமிறங்கினார்கள். மோசமான பார்மில் உள்ள ரோஹித் ஷர்மா, ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரெய்னா, சிறப்பாக ஆடினார். ஸ்கோர் 44 ரன்களாக உயர்ந்தபோது, தவான் 24 ரன்களில் அவுட்டானார். அவர், 14 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி,1 ரன்னுக்கு அவுட்டானார். சுரேஷ் ரெய்னா, தன் பங்குக்கு 30 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர், 10.4 ஓவர்களில் 90 ரன்களாக இருந்தது.

Sponsored
அதற்குப் பிறகு களமிறங்கிய மனீஷ் பாண்டே, தோனி அதிரடி காட்டி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மனீஷ் பாண்டே அரை சதம் கடந்தார். இறுதி ஓவரை பேட்டர்ஸன் வீசினார். அந்த ஓவரை துவம்சம் செய்த தோனி, 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். அதுவும் ஆஃப் சைடில் அவர் விளாசிய ஃப்ளாட் சிக்ஸர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தது. மனீஷ் பாண்டே 79 ரன்களுடனும் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்ஸர்) தோனி 52 ரன்களுடனும் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) களத்தில் இருந்தனர். 189 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடிவருகிறது.

Sponsored
Trending Articles

Sponsored