`குல்தீப், சாஹலின் எழுச்சி, கிரிக்கெட்டுக்கு நல்லது!’ - புகழும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்Sponsoredஇந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும்  யுஷ்வேந்திர சாஹல் ஆகியோரின் எழுச்சி, கிரிக்கெட்டுக்கு நல்லது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹஃபீஸ் கருத்து தெரிவித்துள்ளார். 


இந்திய அணியின் இரட்டை சுழற்பந்துவீச்சாளர்கள் என அழைக்கப்படும் குல்தீப்-சாஹல் ஜோடி, அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இலங்கை மண்ணில் அந்த அணிக்கெதிரான தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றதில், அவர்கள் முக்கியப் பங்காற்றினர். அங்கிருந்து தொடங்கிய அவர்களின் ஆதிக்கம், தென்னாப்பிரிக்கத் தொடரிலும் இருந்தது. இந்தியத் துணைக்கண்டத்துக்கு வெளியில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிப்பதில்லை என்ற விமர்சனத்தை தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் தகர்த்தெறிந்தனர். 6 போட்டிகள்கொண்ட அந்தத் தொடரில், குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 33. இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி அசத்தியது. 

Sponsored


இந்த நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரின் வளர்ச்சிகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹஃபீஸ் பேசியிருக்கிறார். அவர்களின் எழுச்சி, கிரிக்கெட்டுக்கு நல்லது என்று கூறியுள்ள ஹஃபீஸ், பாகிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான சதாப் கானையும் பாராட்டியுள்ளார். 

Sponsored


இதுகுறித்து அவர் கூறுகையில், ``அப்துல் காதிர் காலம் முதல் லெக் ஸ்பின்னர்கள், தங்களுக்கென தனி பாணியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கூக்ளி பந்துவீச்சில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார். அதன்பின்னர், இந்தியாவின் அணில் கும்ப்ளே, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, பாகிஸ்தானின் முஸ்டாக் அகமது என லெக் ஸ்பின்னர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்தனர். ஒவ்வொரு அணியிலும் லெக் ஸ்பின்னர்கள் இடம்பெற வேண்டும்  என நான் நினைக்கிறேன். ஏனெனில், அணியின் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக  இருக்கும். சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல, பாகிஸ்தானின் சதாப் கானும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். ஆனால், அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்றார். 
 Trending Articles

Sponsored