கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆனார் அஷ்வின்!Sponsoredஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகத் தமிழக வீரர் அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு தற்போது இருந்தே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களம் காண்பதுதான். இதற்கிடையே, சமீபத்தில் நடந்த ஏலத்தில் தோனி, ரெய்னா, ஜடேஜாவை RTM கார்டு சென்னை அணி தக்கவைக்க தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வினை பஞ்சாப் வாங்கியது

Sponsored


இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாகத் தற்போது அஷ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணி இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னணி வீரர்களான யுவராஜ் சிங், கெயில் உள்ளிட்டோர் அணியில் உள்ளபோது அஷ்வினுக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கூறுகையில், "இதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஒரு திறமையான அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அணியின் சிறந்த தோற்றத்தை வெளிப்படுத்த முயல்வேன்" என்று தெரிவித்துள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored