வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வால்ஷ் நியமனம்!Sponsoredவங்கதேச கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

Photo Credit: BCB

Sponsored


இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 தொடரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. வரும் 6-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், இலங்கை அணியுடன் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்தத் தொடருக்கான வங்கதேச அணிக்கு ஷகிப் அல் ஹசன் கேப்டனாகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இந்த நிலையில், நிதாஹஸ் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக, கோர்ட்னி வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வங்கதேச அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகக் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வால்ஷ் பணியமர்த்தப்பட்டார். அந்த அணியின் முழுநேரப் பயிற்சியாளராக, இலங்கையில் சண்டிகா ஹதுரசிங்கே செயல்பட்டுவந்த நிலையில், இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக வால்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் எதையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.    
 Trending Articles

Sponsored