புஜாராவின் 94 ரன்களை விட மயாங்க் அகர்வால் அடித்த 90 வொர்த்... கர்நாடகா சாம்பியன்! #VijayHazareSponsoredதென்னாப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டதுமே பி.சி.சி.ஐ-க்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் கே.எல்.ராகுல். `டெல்லியில் நாளை நடக்கவுள்ள விஜய் ஹஸாரே (#VijayHazare) ஃபைனலில் கர்நாடகா அணிக்காக நான் பங்கேற்கலாமா?...’  `அதுக்கென்ன தாராளமா’’ என டபுள் ப்ளூ டிக் அடித்தது பி.சி.சி.ஐ. நேற்று காலையில் பெங்களூரு வந்தவர் சில மணி நேர ஓய்வுக்குப் பின் டெல்லி சென்று, கர்நாடகா அணியுடன் இணைந்து கொண்டார். கே.எல்.ராகுல் இல்லாவிட்டாலும் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடக அணி, ஆச்சர்யமாக ஃபைனல் வரை முன்னேறிய செளராஸ்டிராவை வீழ்த்தி இருக்கும். ராகுல் வந்ததும் எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைத்ததாக நம்பினர் கர்நாடக வீரர்கள். ராகுல், கருண் நாயர், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீநாத் அரவிந்த் என கர்நாடக அணியில் ஏகப்பட்ட தெரிந்த முகங்கள். செளராஸ்டிராவில் ரவீந்திர ஜடேஜா, கேப்டன் புஜாரா, உனத்கட் தவிர்த்து வேறு யாரும் பிரபலம் இல்லை. ஆக, கர்நாடகா எளிதாக வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே வென்றது. மூன்றாவது முறையாக விஜய் ஹசாரே சாம்பியன்.

விஜய் ஹசாரே மட்டுமல்ல 2017-18 சீசன் முழுவதுமே மயங்க் அகர்வால்தான் டொமஸ்டிக் கிரிக்கெட்டின் நாயகன். உள்ளூர் போட்டிகளில் ஒரே சீசனில் 2,000 ரன்களுக்கும் மேல் அடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ஆனால், டெல்லியிலேயே தங்கி நாக் அவுட் போட்டிகளை உன்னிப்பாக கவனித்து வந்த தேர்வாளர்கள் கண், மயங்க் அகர்வால் மீது விழவில்லை. நாக் அவுட் சுற்றில் அவர் வெளுத்து வாங்கும்போதே, `ட்ரை சீரிஸ்ல மயங்க் அகர்வாலை எடுக்கலையா... so sad...’ என சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக கமென்ட்கள் வந்தன. இந்திய அணியின் ஜெர்ஸி அணியும் வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டும் என்பது அவருக்குத் தெரியும். லீக் போட்டிகள் போலவே ஃபைனலிலும் பின்னி பெடலெடுத்தார். 77, 109, 84, 28, 102, 89, 140, 81 வரிசையில் இன்று மயங்க் அகர்வால் அடித்த ரன்கள் 90. ஃபைனலில் சதம் அடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Sponsored


ஓவர் பில்டப்லாம் இல்லை. நிஜமாகவே மயங்க் ஆட்டம் பக்கா. முதல் மூன்று ஓவரிலேயே கேப்டன் கருண் நாயர், கீ பிளேயர் கே.எல் ராகுல் என இரு சீனியர் பிளேயர்கள் அவுட்.  அதுவும் டக் அவுட். ஸ்கோர் 15/2. அடுத்து வருபவருடன் பார்ட்னர்ஷிப் பில்டப் பண்ண வேண்டிய நெருக்கடியான சூழல். இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் தேஷ் பாண்டேவுடன் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது அந்த ஜோடி. அதேபோல இன்னொரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது.  இந்தமுறை சமர்த் - அகர்வால் ஜோடி கர்நாடகாவை சரிவிலிருந்து மீட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த பார்ட்னர்ஷிப் எடுத்தது 136 ரன்கள். ரன்ரேட் 6-க்கு மேல்.

Sponsored


முதலில் நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கிய அகர்வால், போகப்போக வெளுத்து வாங்கினார். குறிப்பாக, சனாதியா ஓவரில் அடுத்தடுத்து அடித்த அந்த இரண்டு பவுண்டரிகளும், தர்மேந்திர சின் ஜடேஜா பந்தில் பறக்க விட்ட சிக்ஸர்களும் அற்புதம். இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே வெளிவட்டத்தில் இருக்கும் பவர்பிளேவின்போது, ஒரு வேகப்பந்துவீச்சாளரின் பந்தை இறங்கி வந்து, எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேலே லாஃப்ட் செய்த போதும் சரி, அடுத்த பந்தை மிட் விக்கெட் திசையில் புல் ஷாட் அடித்தபோதும் சரி, ஃபுல் லென்த்தில் விழுந்த பந்தை யோசிக்கவே யோசிக்காமல் டிரைவ் செய்த போதும் சரி, மயங்க்கின் பேட்டிங்கில் அவ்வளவு நேர்த்தி. ஆனால், 90-களில் இருக்கும்போது எவ்வளவு நிதானமாக ஆடியிருக்க வேண்டும். எல்லா பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்தால் எப்படி? ஜடேஜா லாங் ஆஃபில் வைத்து தட்டுத் தடுமாறித்தான் அந்தக் கேட்ச்சைப் பிடித்தார். இருந்தாலும், பந்தைப் பறக்கவிட வேண்டிய நேரமல்ல அது.

மயங்க் உடன் ஜோடி சேர்ந்து பிரமாதமாக ஆடிய சமர்த், மான்கட் பந்தில் வீழ்ந்தார். மிதவேகப்பந்துவீச்சாளர் வீசிய அந்த `சுழலில்’ சமர்த் ஏமாந்தார். சமர்த் மட்டுமல்ல...! இல்லையெனில் அவரும் அரைசதம் அடித்திருப்பார். கர்நாடாக 253 என்ற டீசன்ட்டான ஸ்கோரை எட்ட தேஷ்பாண்டே அடித்த 49 ரன் ரொம்ப முக்கியம். மயங்க் போலவே தேஷ்பாண்டேவின் ஷாட்களும் நேர்த்தி. செளராஸ்டிரா சார்பில் மக்வானா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

253 என்பது எளிதான இலக்குதான். கர்நாடகாவிடம் மிரட்டும் பெளலர்கள் இல்லைதான். அதைவிட சோகம் செளராஸ்டிராவில் பட் பட்டென விளாசக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை. அவர்கள் கடைசிவரை புஜாராவைத்தான் நம்ப வேண்டியிருந்தது. விஷயம் என்னவெனில் புஜாராதான் செளராஸ்டிராவின் டாப் ஸ்கோரர். அவர் 94 ரன்களில் ரன் அவுட்டானபோது பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால், மயங்க் அகர்வால்  உடன் சமர்த் ஜோடி சேர்ந்ததபோல, சேஸிங்கின்போது புஜாராவுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. புஜாராவுக்கு அடுத்து அந்த அணியில் அதிக ரன்கள் எடுத்தது ஓப்பனர் பரோட்(30), ஜானி (22).

தவிர, புஜாராவே ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டியைப் போலத்தான் ஆடிக்கொண்டிருந்தார். 29 பந்துகளில் 6 ரன்கள். பவர் பிளேவில் பந்துகளை தின்று தீர்த்தார். 35-வது பந்தில்தான் முதல் பவுண்டரியே. அதுவும் எட்ஜ். கடைசி நேரத்தில் ஸ்டுவர்ட் பின்னி பந்தில் இறங்கி வந்தலெ்லாம் சிக்ஸர் அடித்தார். இருந்தாலும் அது டூ லேட். மேட்ச் ஏற்கெனவே கையைவிட்டுப் போய்விட்டது. 41 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா வெற்றி. மூன்றாவது முறையாக சாம்பியன். எதிர்பார்த்ததுபோலவே மயங்க் அகர்வால் ஆட்ட நாயகன். ஃபைனலுக்கு முன், கடந்த சீசனில் விதர்பா அணி ரஞ்சி சாம்பியன் ஆனதுபோல், செளராஸ்ட்ரா பட்டம் வெல்லுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபைனலில் அவர்கள் விளையாடியதைப் பார்த்தபோது, செளராஸ்டிரா ஃபைனல் வரை வந்ததே பெரிய விஷயம்தான்!Trending Articles

Sponsored