கேப்டவுன் குடிநீர் பஞ்சத்தைப் போக்க இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் நிதியுதவி!Sponsoredகேப்டவுனில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தைப் போக்க இந்தியா மற்றும்  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இணைந்து ஒரு லட்சம் ரேண்ட் (இந்திய ரூபாய் மதிப்பில் 5.5 லட்சம்) நிதியுதவி அளித்தன. 

Photo Credit: Twitter/OfficialCSA

Sponsoredஉலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. மிக விரைவில் எட்டப்படவிருக்கும் இந்த நாளை ஆங்கிலத்தில் "டே ஜீரோ" (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி அல்லது 21-ம் தேதி, இந்த நாளை எட்டிவிடும்  தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான கேப்டவுன் (Cape Town). கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அந்நகரில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

Sponsored


இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி கேப்டவுன் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ எண்ணியது. தென்னாப்பிரிக்க அணியுடன் இணைந்து, இரு அணி நிர்வாகங்கள் சார்பில் ஒரு லட்சம் ரேண்ட் (ரூ.5.5 லட்சம்) நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. கிஃப்ட் ஆஃப் தி கிவர்ஸ் (Gift of the Givers) என்ற தொண்டு நிறுவனம் மூலம், இந்த நிதி அப்பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும், தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கும் மக்களுக்குக் குடிநீர் வழங்கவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையைத் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசிஸ் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இணைந்து அந்த அமைப்பினரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்தனர். 

இதுகுறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டூபிளசிஸ், ‘கேப்டவுன் போட்டியின்போது இரு அணி வீரர்களுமே தண்ணீர் பஞ்சத்தின் கோர முகத்தை அறிந்தோம். இது தொடர்பாக விராட் கோலியிடம் பேசினேன். இரு அணி வீரர்களும் கையெழுத்திட்ட ஜெர்ஸிக்களை ஏலம் விட்டு, அதன்மூலம் கிடைக்கும் நிதியை அளிக்க முடிவு செய்துள்ளோம். அதேபோல், இந்தப் பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும்  நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுக்கவும் நாங்கள் எண்ணியுள்ளோம்’’ என்றார். 
விராட் கோலி கூறுகையில், ``உலகின் அழகான நகரங்களில் ஒன்று கேப்டவுன். நியூலேண்ட்ஸ் மைதானத்தில் எப்போது விளையாடினாலும், உள்ளூர் மக்கள் அளிக்கும் வரவேற்பு போற்றுதலுக்குரியது. பஞ்சம் குறித்த விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்கு எங்களாலான ஒரு சிறு முயற்சி இது. இதன்மூலம், தங்கள் நகரத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள்’’ என்றார்.
 Trending Articles

Sponsored