`தேர்வுக்குழு தலைவர்பதவியிலிருந்து ராஜினாமா!’ - வெங்கடேஷ் பிரசாத்தைச் சுற்றும் சர்ச்சைSponsoredஇந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர்பதவியிலிருந்து வெங்கடேஷ் பிரசாத் ராஜினாமா செய்துள்ளார். 

நியூஸிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையை இந்திய ஜூனியர் அணி வென்று ஒரு மாதம் நிறைவடையாத நிலையில், வெங்கடேஷ் பிரசாத் ராஜினாமாசெய்துள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய சீனியர் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கடந்த 2016-ம் ஆண்டின் ஜூனியர் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய 30 மாதங்கள் அந்தப் பதவியில் வெங்கடேஷ் பிரசாத் இருந்தார். உலகக் கோப்பையை இந்திய ஜூனியர் அணி வென்ற பின்னர், பிசிசிஐ சார்பில் தேர்வுக்குழுவுக்கு பரிசுத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

Sponsored


அதேநேரம், மகளிர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய தொடர்களின் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த மகளிர் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணிகளின் தேர்வுக்குழுவுக்கு பிசிசிஐ சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக வெங்கடேஷ் பிரசாத் கூறினாலும், அதற்கான உறுதியான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராகவே அவர் பதவி விலகி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதேபோல, பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் அவர் பதவி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.  
 

Sponsored
Trending Articles

Sponsored