`ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக்!’ - நியூஸிலாந்து உள்ளூர் தொடரில் சாதனைSponsoredநியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. 

Photo Credit: Black Caps

Sponsored


நியூஸிலாந்தில் ப்ளங்கிட் ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் தொடர் நடந்துவருகிறது. இதில், வெலிங்டன் ஃபையர் பேர்டு மற்றும் கேன்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில், வெலிங்டன் அணியின் லோகன் வான் பீக், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உள்ளூர் தொடரில், அவரின்  முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும். அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்த, கேன்டர்பெர்ரி அணி 53 ரன்களில் ஆட்டமிழந்தது. 

Sponsored


அதேநேரம், ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஆக்லாந்து ஏசஸ் மற்றும் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆக்லாந்து வீரர் மேட் மெக்இவான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம், 112 ஆண்டுக்கால ப்ளங்கிட் ஷீல்டு தொடரில் ஒரே நாளில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளது.       
 Trending Articles

Sponsored