வில்லியம்ஸன் போராட்டம் வீண்! - `திரில்' வெற்றி பெற்றது இங்கிலாந்துநியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் கடைசி ஓவர்வரை போராடியும் அணிக்குத் தோல்வியே மிஞ்சியது.

Sponsored


இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. 3 வது போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இங்கிலாந்தைப் பேட் செய்யப் பணித்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாகக் கேப்டன் மோர்கன் 48 ரன் எடுத்தார். 

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கப்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்ஸன் தொடக்க வீரர் முன்ரோவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்கோர் 80 ரன்னாக உயர்ந்தபோது முன்ரோ 49 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள், வருவதும் போவதுமாக அணிவகுப்பு நடத்தவே, நியூசிலாந்து திணறியது. ஒருகட்டத்தில் 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

இந்தச்சூழலில், களமிறங்கிய சான்ட்னர், வில்லியம்ஸனுக்கு ஒத்துழைப்பு அளித்தார். சிறப்பாக விளையாடிய சான்ட்னர் ஸ்கோர் 199 ஆக உயர்ந்தபோது, ரன் அவுட்டானார். அவர் 41 ரன்கள் எடுத்தார். இதற்கிடையே, வில்லியம்ஸன் சதமடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. வோக்ஸ் வீசினார். வில்லியம்ஸன் எதிர்கொண்டார். முதல் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. 2 வது பந்தில் 2 ரன்கள் எடுத்த வில்லியம்ஸன் அடுத்த பந்தை சிக்ஸருக்குத் தூக்கினார். 3 பந்தில் 7 ரன் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால், நேர்த்தியாகப் பந்துவீசிய வோக்ஸ் வெற்றி தேடித்தந்தார். 4 வது பந்தில் 2 ரன் எடுத்த வில்லியம்ஸனால் அதற்கடுத்த பந்துகளில் ரன் எடுக்க முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்ஸனின் போராட்டம் வீணானது. அவர் 112 ரன்களுடன் களத்திலிருந்தார். தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored