`19 வயதில் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டன்!’ - ஆஃப்கானிஸ்தான் வீரர் புதிய சாதனைSponsored19 வயதில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம்வயது கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். 

Photo Credit: Twitter/cricketworldcup

Sponsored


வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் ஐ.சி.சி உலகக் கோப்பைத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக, இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் செயல்பட்டார். அந்த அணியின் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய், உடல் நலக்குறைவால் விளையாட முடியாத சூழல் ஏற்படவே, ரஷீத் கான் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தற்போது 19 வயது 165 நாள்கள் வயதுடைய ரஷீத் கான், இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட்டில் இளம் வயதில் கேப்டனாகச் செயல்பட்டவர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பாக 20 வயது 297 நாள்கள் வயதுடன் வங்கதேச அணியின் கேப்டனாகச் செயல்பட்டிருந்த  ரஜின் சலே, இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். 

Sponsored


அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி, 255 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 47.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் ரஷீத் கான், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பந்துவீச்சைப் பொறுத்தவரை 9 ஓவர்கள் பந்துவீசிய அவர், 68 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சர்வதேச டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஷீத் கான், ஒரு நாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2 வது இடத்தில் இருக்கிறார்.   Trending Articles

Sponsored