`பி.சி.சி.ஐ நிர்வாகக் குழு அதிருப்தி எதிரொலி’ - ஐ.பி.எல் தொடக்க விழா தேதியில் மாற்றம்!



Sponsored



ஐ.பி.எல் தொடரின் தொடக்க விழா ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பதிலாக 7-ம் தேதி நடைபெறும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ) வட்டாரங்கள் தெரிவித்தன.


உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் தொடர், வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் தொடர் மொத்தம் 9 நகரங்களில் 51 நாள்கள் நடக்கிறது. முதல் போட்டியும் இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில்  நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர், ஐ.பி.எல்லுக்குத் திரும்பியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

Sponsored


ஐ.பி.எல் தொடரின் 11-வது சீஸன் தொடக்க விழா மும்பை வான்கடே மைதானத்தில் போட்டிகள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 6-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தொடக்க விழா ஏப்ரல் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.பி.எல் தொடருக்கு ஒருநாள் முன்னதாகவே தொடக்கவிழா நடைபெறுவதற்கு பி.சி.சி.ஐ-யை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு அதிருப்தி தெரிவித்ததாலேயே மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. 
 

Sponsored




Trending Articles

Sponsored