ஐ.எஸ்.எல் அரையிறுதியில் சென்னை - கோவா மோதல்... வெளியேறியது ஜாம்ஷெட்பூர்! #ISLSponsoredஐ.எஸ்.எல் 4-வது சீசனின், தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியை எதிர்கொண்ட சென்னையின் எஃப்.சி அணி, ரெனே மெஹிலிச் அடித்த பெனால்டி கோலால், 1-0 என அசத்தலாக வெற்றி பெற்றது. ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிட்டதால், சென்னையின் கீ பிளேயர்களான ரஃபேல் அகஸ்டோ, ஜேஜே, செரெனோ, கரான்ஜித் சிங், இனிகோ கால்டரான், ஜெர்ரி, மெயில்சன் மற்றும் தனபால் கணேஷ் ஆகியோருக்கு ஓய்வளித்த சென்னையின் பயிற்சியாளர் ஜான் கிரிகரி, அதுவரை அதிக போட்டிகளில் பங்கேற்காத வீரர்களைக் களமிறக்கினார். கடைசி நிமிடம் வரை போராடிய மும்பை அணி, தோல்வியுடன் இந்த சீஸனை முடித்துக் கொண்டது. இளம் வீரர்கள் அடங்கிய கத்துக்குட்டி அணியை வைத்துக்கொண்டு, மூன்று புள்ளிகளை வென்ற சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

தொடக்கம் முதலே சென்னை அணி மிகவும் நிதானமாக ஆடியது. தெளிவான பாஸிங் மற்றும் கூலான பொசஷன் கேமுடன், அவ்வப்போது மும்பை கோல்கீப்பர் பட்டாச்சார்யாவையும் சோதிக்க தவறவில்லை சென்னை வீரர்கள். இரு அணியின் கோல்கீப்பர்களும் விட்டுக் கொடுக்காததால் முதல் பாதி கோல்கள் ஏதுமின்றி முடிந்தது. மும்பை வீரர்கள் எப்போது தவறிழைப்பார்கள், எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்த சென்னை வீரர்களுக்குப் பரிசாக, 67-வது நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மும்பை கோல் பாக்சிற்குள் பந்தோடு வந்த கேவிலனை தடுக்க மும்பை டிஃபெண்டர் வடூ முயற்சிக்க, அது வினையாக பெனால்டியில் முடிந்தது. கிடைத்த வாய்ப்பை தவறவிடாத சென்னையின் ரெனே மெஹிலிச், பந்தை வெற்றிகரமாக பாட்டம் ரைட் கார்னருக்கு அனுப்பி வைத்தார். இது இந்த சீசனில் அவரது இரண்டாவது கோல். கவுன்ட்டர் அட்டாக்கை நம்பாமல், நல்ல பாஸிங் கேம் ஆடிய சென்னை அணியை, கவிலனும், ரெனே மெஹிலிச்சும் தங்களது சிறப்பான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

Sponsored


முன்னதாக, முதல் பாதியின் 37 வது நிமிடத்தில் கேவிலன் மும்பையின் கோல் பாக்சிற்குள் கொண்டு வரப்பட்டு, டேக்கிள் செய்யப்பட்ட பந்தை ஜூட் உதைக்க, அந்த ஷாட் மும்பை கீப்பரால் தடுக்கப்பட்டாலும் பந்து கொஞ்சம் உள்ளே சென்று, பின் கோல் கம்பத்தில் பட்டு பரிதாபமாக வெளியேறியது. பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் மும்பை அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. மும்பை அணியின் பல்வந்த் சிங், எவர்டன் சான்டோஸ், கோஸ்டா மற்றும் எமானா ஆகியோரின் ஷாட்டுகள் சென்னையின் டிஃபென்ஸாலும், சென்னை கோல்கீப்பர் பவன் குமாராலும் தடுக்கப்பட, ஒன்றிரண்டு ஷாட்டுகள் கோல் கம்பத்திற்கு வெளியே சென்றன. மேற்கொண்டு பதிலுக்கு சென்னை வீரர்கள் எடுத்த முயற்சிகளும் வீணாக,  ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையிடம் விழுந்தது. ஆட்டநாயகன் விருதை சென்னையின் கேவிலன் தட்டிச் சென்றார்.

Sponsored


ஞாயிற்றுக்கிழமை நடந்த முக்கியமான போட்டியில் கோவா, ஜேம்ஷெட்பூர் அணிகள் மோதின. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. காரோமினாஸ், லான்சரோட்டி இணையின் அற்புத ஆட்டத்துக்கு முன்னால், ஜேம்ஹெட்பூர் அணியின் பலமான தடுப்பாட்டம் ஆட்டம் கண்டது. காரோமினாஸ் 2 கோல்களும், லான்சரோட்டி 1 கோலும் அடிக்க, கோவா அணி 3-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

மற்றொரு போட்டியில் ATK அணி 1-0 என நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியை வீழ்த்தியது. ATK-வின் மார்க்கீ வீரர் ராபீ கீன் கோல் அடித்து இந்த சீசனை சிறப்பாக முடித்தார். இந்த வெற்றியின்மூலம் ATK 16 புள்ளிகளுடன் 9-வது இடம் பிடித்தது. அந்த அணி அரையிறுதியைத் தவறவிடுவது இதுவே முதல்முறை. அரையிறுதியில் சென்னையின் எஃப்.சி அணி கோவாவையும், பெங்களூரு புனேவையும் எதிர்கொள்கின்றன. Trending Articles

Sponsored