5 கோடி ரூபாய் சம்பளம் தரும் ஏ கிரேடை மிஸ் செய்த ஷமி... காரணமான ஸ்க்ரீன்ஷாட்ஸ்!Sponsoredஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.கடந்த நான்கு வருடங்களாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற சிறப்பாக பந்து வீசினார்.

அடிக்கடி தோள்பட்டை, கால்முட்டிகளில் காயத்தால் அவதிப்பட்டாலும் அணிக்கு திரும்பும் போதெல்லாம் ஸ்விங்,யார்க்கர்,பவுன்சர்,டெத் ஓவர் என எல்லா விதமான பந்துகளிலும் எதிரணியை மிரட்டி வந்தவர்ஷமி. இதுவரை 30 டெஸ்ட்,50 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Sponsored


பெங்களூருவில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்,டெல்லிக்கு இடையிலான இழுபறியால் 3 கோடிக்கு RTM கார்டை பயன்படுத்தி முந்தைய சீசனில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார்

Sponsored


களத்தில் தனது திறமையால் கெத்து காட்டினாலும் பொது வாழ்வில் அவ்வப்போது புகைச்சல்கள் வந்து கொண்டே இருக்கிறது. முகமது ஷமிக்கு ஹசின் ஜகான் என்கிற மனைவியும், அய்ரா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் முகமது ஷமி பல பெண்களுடன் ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப்பில் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி அடுக்கடுக்கான புகாரை கூறியுள்ளார்.

ஷமியின் பி.எம். டபுல்யூ காரில் இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வழங்கப்பட்ட மொபைல் போனை, அவரது மனைவி எதேச்சையாக எடுத்து பார்த்துள்ளார்.அதில் ஷமி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பல பெண்களுடன் இங்கிலீஷ் இந்தியில் அந்தரங்க ரீதியில் சாட் செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சாட் மெசேஜ் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு ஷமியின் லீலைகள் என்கிற தலைப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த வருடம் சிறிய பிரச்சனை ஏற்பட்டது. ஷமி அவ்வப்போது தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் போடுவது  வழக்கம். முன்பு ஒருமுறை இவ்வாறு மனைவி படத்தை வெளியிட்டபோது, அவர் உடலை முழுக்க மூடும் வகையில் பர்தா அணியவில்லை என்ற விமர்சனங்களை, முஸ்லிம் அமைப்பினர் முன்வைத்து புகார் கூறினர். இது சமூக வலைத்தளங்களில் விவாதமாகவும் சர்ச்சையும் ஆகியிருந்தது.

அப்போது கூட ஷமி தனது மனைவிக்கு ஆதரவாகவே இருந்தார். இந்நிலையில் ஹசின் ஜகான் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் பல புதுப்புது அதிர்ச்சிகரமான புகார்களை கூறியுள்ளார். ஷமியை ஏற்கனவே பலமுறை எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். தனது குழந்தை அய்ராவிற்காகத்தான் இத்தனை காலம் தான் பொறுத்துப் போனதாகவும் அது மட்டுமல்லாது ஷமியின் தாயார் மற்றும் அவரது சகோதரரும் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். சிலசமயம் அதிகாலை 2 மணி வரைக்கும் கூட சண்டை நீடிக்கிறதெனவும், பாகிஸ்தானைச் சேர்ந்த மோசமான பெண்ணுடனும் பழக்கம் வைத்துள்ளார் என்றும் வேறுவிதமான புகாரையும் தெரிவித்துள்ளார். 

இதையறிந்த ஷமி, உடனடியாக  மனைவியின் புகாரில் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக பிசிசிஐ நேற்று அறிவித்த வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு அறிவிப்பில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறவில்லை. குடும்ப தகராறை கருத்தில் கொண்டு அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது. இல்லையெனில் முகமது ஷமி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் பெறும் A கிரேடு லிஸ்ட்டில் வந்திருக்கக்கூடும்.Trending Articles

Sponsored