`தோல்விக்குப் பழிதீர்க்குமா இந்தியா!’ - இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் ஃபீல்டிங் தேர்வுSponsoredநிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் தேர்வுசெய்தது. 

Photo: Twitter/BCCI

Sponsored


இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது. கொழும்பில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது. இதையடுத்து, வங்கதேச அணியை எதிர்கொண்ட இந்திய அணி, அந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது. 

Sponsored


இந்த நிலையில், தொடரின் 4-வது லீக் போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் மழை பெய்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரம் தாமதமாகப் போட்டி தொடங்கியுள்ளது. இதனால், 19 ஓவர்கள் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங் தேர்வுசெய்தார். இந்திய அணியில், கடந்த போட்டியில் விளையாடிய ரிஷாப் பாண்ட்-க்குப் பதிலாக கே.எல்.ராகுல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2 டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், திசாரா பெரேரா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார். Trending Articles

Sponsored