152 ரன்கள் இலக்கு..! இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியாSponsoredஇந்தியா-இலங்கை இடையிலான நான்காவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவருக்கு 9 விக்கெட் இழப்பு 152 ரன்கள் எடுத்துள்ளது. 

இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்துவருகிறது.4-வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

Sponsored


இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக தனுஷ்கா குணதிலாகவும், குஷல் மென்டிஷ்ம் களமிங்கினர். 17 ரன்களில் குணதிலகா ஆட்டமிழக்க, குஷல் அதிரடியாக ஆடிய 55 ரன்கள் குவித்தார். உபுல் தரங்கா 22 ரன்களும், டாஷன் ஷனகா 19 ரன்களும் குவித்தனர். 19 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 152 ரன்களைக் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 11 ரன்களிலும், தவான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 4 ஓவர் முடிவில் 35 ரன்களை எடுத்துவிளையாடிவருகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored