`நம்பினேன்; நடந்துவிட்டது' - வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி``வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் சிக்ஸர் அடிக்க முடியும் என நம்பினேன்'' என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

Sponsored


இந்தியா - வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டி கொழும்பில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இறுதியாகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதில் கடைசி ஓவரின் இறுதிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்சர் அடித்து இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக அமைந்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்தப் பேட்டிங் இந்திய அளவில் அவருக்கு பாராட்டுகளைக் குவித்துவருகிறது.

Sponsored


இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், 'இந்திய அணியில் இடம்பிடிக்க கடுமையான போட்டி இருக்கும்போது, கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவது அவசியம். இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். சென்னை அணியில் இடம் கிடைக்காதது எனக்கு வருத்தமளிக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச் சிறந்த இன்னிங்ஸ். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன். அதுபோல் நடந்துவிட்டது' என்று தெரிவித்தார். 

Sponsored
Trending Articles

Sponsored