`என் தரப்பு வாதத்தைக் கேட்காதது ஏன்?’ - ரபாடா விவகாரத்தில் ஐசிசியை விமர்சிக்கும் ஸ்மித்Sponsoredதென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விமர்சித்துள்ளார். 

Photo Credit: Twitter/Cricket.com.au

Sponsored


ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, அவரது தோள் மீது இடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரபாடாவுக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து ரபாடா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 மணி நேரத்துக்கும் மேலாக நேற்று நடந்த விசாரணையில் ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 

Sponsored


ஐசிசியின் இந்த முடிவுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், அதிருப்தி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், போட்டிக்கு முன்னதாக ஸ்மித் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், ``வீடியோ பதிவில் இருப்பதை விட, ரபாடா முரட்டுத்தனமாக என்னைத் தள்ளினார். ஆனால், எந்த அடிப்படையில் அவருக்கான தடை நீக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும், அதுகுறித்து பெரிதாக நான் கவலைப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் முடிவுக்கு வந்தது ஆச்சர்யமளிக்கிறது’’ என்றார். 
 Trending Articles

Sponsored