``கேப்டன் கூல் தோனி இருக்க எனக்கென்ன கவலை!’’ மீண்டும் சிஎஸ்கே-வில் டுவைன் பிராவோSponsoredஐ.பி.எல் வந்து விட்டது. சி.எஸ்.கே மீண்டு வந்து விட்டது. சேப்பாக்கம் ஸ்டேடியம் அலங்காரத்துடன் தயாராகி வருகிறது. டுவைன் பிராவோ சென்னை வந்துவிட்டார். சென்னை வந்து சேர்ந்த வீரர்கள் பி கிரவுண்டில் பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டனர். ப்ரோமோ, பிரஸ் மீட் என சி.எஸ்.கே நிர்வாகம் பிஸியாகி விட்டது. அப்படியொரு ஸ்பான்ஷர் பிரஸ் மீட்டில் முரளி விஜய், டுவைன் பிராவோ இருவரும் சி.எஸ்.கே சார்பில் கம்பேக் கொடுத்தனர்.

``வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுவிட்டது. ஒருவேளை தகுதிபெறாமல் இருந்திருந்தால், வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பையை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா?’’

Sponsored


டுவைன் பிராவோ: ``உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றதற்காக வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களை நினைத்து சந்தோஷப்படுகிறேன். வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக் கோப்பை என்பது இத்தாலி இல்லாத ஃபிஃபா உலகக் கோப்பையைப் போன்றது. அதை நினைத்துப் பார்க்கவே முடியாது. தற்போதுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் இளமையான அணி. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நடக்கும் களேபரங்களுக்கு இடையே, அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் எப்போது நன்றாகவே விளையாடியிருக்கிறது.’’

Sponsored


``சென்னை அணிக்குத் திரும்பியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

பிராவோ: ``சென்னைக்குத் திரும்புவது என்பது வீட்டுக்குத் திரும்புவதுபோன்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியை மிஸ் செய்தது கொஞ்சம் ஏமாற்றமே. ஐ.பி.எல் ஏலத்தின்போது ஆஸ்திரேலியாவில் இருந்தேன். எப்படியாவது சி.எஸ்.கே என்னை ஏலத்தில் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது நடந்து விட்டது. என் மீது நம்பிக்கை வைத்திருந்த அணி நிர்வாகத்துக்கு நன்றி. சி.எஸ்.கே அணியில் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஷ் தொடருக்குப் பிறகு வேறு எந்த அணியிலும் விளையாடவில்லை. 

``வெஸ்ட் இண்டீஸ் பிளேயர்கள் அனைவரும் ஐ.பி.எல் தொடரில் ஜொலிப்பது எதனால்?’’

பிராவோ: ``எங்களை நாங்களே கொண்டாடக்கூடியவர்கள். டி-20-யைப் பொறுத்தவரை என்டெர்டெயன்மென்ட்தான் முக்கியம். மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர். எங்களின் கேம்ஸ்டைல் அதற்கு உகந்ததாக இருக்கிறது. அதனால்தான் கெய்ல், பொல்லார்டு, டேரன் சமி போன்ற வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் வெற்றிகரமாக வலம்வருகிறார்கள். அதேமாதிரி வெறுமனே விளையாட வேண்டும் என்பது மட்டுமல்லாது வெற்றிபெற வேண்டும் என்ற வெறி எங்களுக்குள் ஊறிப்போயிருக்கிறது.

``சி.எஸ்.கே அணிக்காக ஐந்து ஆண்டுகள் விளையாடியிருக்கிறீர்கள். அப்போது போலிஞ்சர், ஹில்ஃபெனாஸ், நெஹ்ரா போன்ற சீனியர் பெளலர்கள் அணியில் இருந்தனர். இப்போது அனுபவமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. நீங்கள்தான் வேகப்பந்துவீச்சை முன்னின்று நடத்த வேண்டும் என்பதில் நெருக்கடி இருக்கிறதா?’’

பிராவோ: ``கண்டிப்பாக நெருக்கடி இல்லை. வாட்சன், ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடியும் இல்லை. எல்லாவற்றையும்விட கேப்டன் கூல் (தோனி) இருக்கிறார். அவர் எப்போதுமே அந்த மொமன்ட்டை அனுபவிக்கச் சொல்வார். அதனால், எந்த நெருக்கடியும் இல்லை. தவிர, இளம் உள்ளூர் வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

`` `டெஸ்ட், டி-20  போட்டிகள் மட்டுமே கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருக்கும்’ என ஷேன் வார்னே சொல்லியிருக்கிறார். உங்கள் கருத்து?’’

பிராவோ: ``அதைப் பற்றி கருத்துச் சொல்ல நான் யார்? டி-20, டெஸ்ட், ஒன் டே மட்டுமல்ல, டி-10 ஃபார்மட் கூட வந்துவிட்டது. இவை எல்லாமேதான் கிரிக்கெட். எல்லா ஃபார்மட்டையும் விளையாட வேண்டும். இதைப் பற்றி வேறு என்ன சொல்ல...’’

``மிச்செல் சான்ட்னர் உங்கள் கேம் பிளானில் முக்கியப் பங்கு வகிப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். காயம் காரணமாக அவர் விலகியிருப்பது உங்களுக்கு பின்னடைவாக இருக்குமா? அவருக்கு மாற்று யார்?’’

காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் செயலாளர்: ``எங்கள் கேம் பிளானில் சான்ட்னரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவர் இல்லாதது உண்மையிலேயே பின்னடைவுதான். அவரை யார் ரீபிளேஸ் செய்வது என்பதை பயிற்சியாளர், அணி நிர்வாகம்தான் முடிவு செய்யும்.’’

``கடந்த ஐ.பி.எல் போட்டியில் நீங்கள் விளையாடவில்லை. அதன்பின் லிமிடெட் ஓவர்ஸ் போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை. 2019 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த ஐ.பி.எல் உங்களுக்கு லிமிட்டெட் ஓவர் அணியில் இடம்பெற்றுத் தரும் வாய்ப்பாக அமையுமா?’’ 

முரளி விஜய்: ``நன்றாக விளையாடி அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு தயாராகவே இருக்கிறேன்.’’

அடுத்து வரும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) இந்திய அணியால் சிறப்பாக செயல்பட முடியுமா?

முரளி விஜய்: ``அந்தத் தொடர்களுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவிலும் கூட நன்றாகவே விளையாடினோம். துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து விட்டோம். ஒருவேளை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். தென்னாப்பிரிக்கத் தொடரில் பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும்.’’

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன், கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுவீர்களா?

முரளி விஜய்: ``கவுன்ட்டியில் விளையாடுவதென்பது பெரிய பிராசஸ். அவுட் ஸ்டேஷன் பிளேயர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே அவர்கள் மற்ற வீரர்களைத் தொடர்புகொள்வார்கள். அங்கு விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. கவுன்ட்டியில் விளையாடுவது குறித்து என்னையும் தொடர்பு கொண்டார்கள். ஆனால், அதைப்பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.’’ 

``தென்னாப்பிரிக்கத் தொடரில் நினைத்த அளவு சோபிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்காகவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த  ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் அதையெல்லாம் மறக்கடிக்குமா?’’

முரளி விஜய்: நான் எப்போதுமே ரிலாக்ஸான மனநிலையில்தான் இருப்பேன். என்ன மாதிரியான கேம் விளையாட வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்கிறேன்.’’

``சி.எஸ்.கே-வில் விளையாடிய காலகட்டம் உங்களுக்கு சக்சஸ்ஃபுல்லாக இருந்தது. அந்த நினைவுகள் பற்றி...?’’

முரளி விஜய்: ``மும்பையுடன் ஜெயிப்பது எப்போதுமே எனக்குப் பிடித்த விஷயம். சென்னை அணியுடன் எனக்கு ஏராளமான நினைவுகள் உள்ளன. எது பெஸ்ட் என பட்டியலிட முடியாது. இந்தமுறை அதிக நினைவுகள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

``சி.எஸ்.கே அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது எப்படி இருக்கிறது?’’ 

முரளி விஜய்: ``சி.எஸ்.கே கிரிக்கெட்டிங் ஸ்டைல் அருமையாக இருக்கும். அந்த அணியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி. இது எனக்குக் கிடைத்தப் பெரிய வாய்ப்பு.’’Trending Articles

Sponsored