'எடுடா வண்டிய; போடுடா விசில!' - ரசிக்க வைக்கும் இம்ரான் தாஹிரின் டவிட்Sponsoredஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களம் இறங்க உள்ள தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், தமிழ் ரசிகர்களைக் கவரும் விதமாகத் தங்கிலிஷ்-ல் ட்வீட் செய்து அசத்தியுள்ளார். 

ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் மீண்டும் களமிறங்குவது தமிழகக் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. தற்போது அணிக்கான போட்டோஷூட்களில் நடித்து வருகின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள். வீரர்களின் போட்டோஷூட் வீடீயோக்கள் கடந்த 23-ம் தேதி அன்று இணையதளத்தில் வெளியாக வைரலாக பரவியது.

Sponsored


 

Sponsored


இந்தநிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான இம்ரான் தாஹிர், தமிழக ரசிகர்களைக் கவரும் விதமாக, அவரின் ட்விட்டர் பக்கத்தில் தங்கிலிஷ்-ல் ட்விட் ஒன்றைத் தட்டி உள்ளார். அதில், என் இனிய தமிழ் மக்களே வணக்கம். சிங்காரச் சென்னைக்கு நாளை வந்தடைவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வர்றோம் தட்றோம் தூக்குறோம். எடுடா வண்டியா போடுடா விசில' என்று பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored