பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: முதலில் கண்டுபிடித்த முன்னாள் ஸ்விங் பவுலர்!



Sponsored



தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்தியதைக்  கண்டுபிடித்ததில் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஃபானி டிவில்லியர்ஸ்க்கு  முக்கிய பங்கு உள்ளது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 4 போட்டிகளைக் கொண்டடெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகளில் 1-1 என்ற விகிதத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி தான் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டி. இந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் மஞ்சள் நிறத்திலான ஒரு பொருளை வைத்து பந்தின் மீது தேய்த்தார் அந்தக்  காட்சி கேமராக்களில் பதிவானது. கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப்  சம்பவத்தால், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 

Sponsored


கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்தச்  சம்பவத்தை கண்டுபிடித்ததில், முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஃபானி டிவில்லியர்ஸ்க்கு தான் முழுப் பங்கு உள்ளது. இந்தத்  தொடரில், அவர் ஒளிபரப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் கூறும்போது, ”ஆடுகளத்தில் புற்கள் இருக்கும் போது அது ரிவர்ஸ் ஸ்விங் ஆவது சாத்தியமே இல்லை. பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய ஆடுகளங்களில் 20 ஓவர்கள் முதலே அது சாத்தியம். 

Sponsored


ஆனால், 25,26 வது ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர்களால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடிகிறது என்றால், ஏதோ செய்கிறார்கள் எனச் சந்தேகித்தேன். அதன் அடிப்படையில் எங்களது கேமரா நபர்களிடம், பந்தை ஏதோ செய்கிறார்கள், அதன் மீது கவனம் செலுத்துங்கள் எனக்கூறினேன். சுமார் ஒன்றரை மணிநேர அலசலுக்குப் பின்னர், பான்கிராப்ட் பந்தை, மறைத்து வைத்திருந்த ஒரு உலோகம் கொண்டு தேய்ப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்றார்.

ஃபானி டிவில்லியர்ஸ் ஒரு சிறந்த ஸ்விங் பவுலர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Trending Articles

Sponsored