`ஸிவிங் பவுலிங்கில் மாஸ்டர் கிளாஸ்!’ - ஸ்மித்தை சீண்டும் ஏர் நியூசிலாந்து நிறுவனம்Sponsoredபந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கி தண்டனைக்குள்ளான ஸ்டீவன் ஸ்மித்துக்கு, ஸ்விங் பவுலிங் மாஸ்டர் கிளாஸ் எடுப்பதாகக் கூறி ஏர் நியூசிலாந்து நிறுவனம் சீண்டியுள்ளது. 

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கேப்டவுன் டெஸ்டில் பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதித்து  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், மற்றொரு வீரரான பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவிலிருந்து ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப அனுப்பப்படுகின்றனர். 

Sponsored


இந்தநிலையில், ஸ்மித்தைச் சீண்டும் வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஏர் நியூசிலாந்து நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், `ஹாய் ஸ்மித். நீங்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதாகக் கேள்விப்பட்டோம். ஸ்விங் பவுலிங் வீசுவது தொடர்பாக மாஸ்டர் கிளாஸ் எடுக்கவிருக்கிறோம். இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. ஆஸ்திரேலியா செல்லும் முன்னர், நியூசிலாந்து வந்து செல்வது உங்களுக்கு நன்மை பயக்கலாம். இந்த ஆஃபர் இங்கு மட்டுமே. டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோரையும் நாங்கள் வரவேற்கிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
 

Sponsored
Trending Articles

Sponsored