`இதுதான் சரியான முடிவாக இருக்கும்!’ - ஆஸி. பயிற்சியாளர் டேரன் லேமன் ராஜினாமா



ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Sponsored


Photo: Twitter/ICC

Sponsored


பால் டேம்பரிங் (ball-tampering) இந்த வார்த்தைதான் இப்போது கிரிக்கெட் உலகை அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட்டுக்கு 9 மாதம் தடை, வார்னர், ஸ்மித் இருவருக்கும் ஒரு வருடம் தடை விதித்து ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியம் அதிரடி காட்டியுள்ளது. பந்தைச் சேதப்படுத்திய செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் துணைக் கேப்டன் வார்னர் ஆகிய இருவரும் மன்னிப்புக் கோரியுள்ளனர்.  

Sponsored


ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான வார்னே, மைக் ஹஸி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இந்த தடைக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளைக் கூறியுள்ளனர். இந்நிலையில், பயிற்சியாளர் டேரன் லேமன் தனது பதவியை ராஜினாமா செய்வதாகத்  திடீரென அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்டுடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``இன்று நடந்த சம்பவங்கள் என்னை ராஜினாமா முடிவை எடுக்க வைத்தன. செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் அழுததை பார்த்தேன். அது உண்மையில் அனைத்து வீரர்களும் வலிக்கிறது. முன்பு கூறியது போல, பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், நல்லவர்கள் தவறு செய்கிறார்கள். அனைவரையும் போலவே நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். இதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். எனினும் அணியை மீண்டும் கட்டமைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இது சரியான தருணமாகும். ஆஸ்திரேலிய அணியை மீண்டும் கட்டமைப்பதற்கு  இதுவே சரியான முடிவாக இருக்கும்" என்றார்.



Trending Articles

Sponsored