ஐபிஎல் டிக்கெட் விற்பனை - கவுன்டர்கள் செயல்படும் தேதிகள் அறிவிப்பு..!Sponsoredசென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்கப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

11-வது ஐபிஎல் டி20 போட்டி, வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை நடக்கிறது. இதில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக, தற்போது தீவிர பயிற்சியில் தோனி, ரெய்னா, ஹர்பஜன் உள்ளிட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை அணி, சொந்த மண்ணில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி, ஏப்ரல் 10-ம் தேதி இரவு 8 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சந்திக்கிறது. 

Sponsored


Sponsored


இதற்கான டிக்கெட் விலை விவரம் வெளியிடப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.1,300 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.6,500  என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைனிலும், ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கிடையே, ஸ்டேடியம் டிக்கெட் கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் ஆட்டத்திற்கான டிக்கெட், நாளை மறுதினம் (02/04/18) விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored