அரபிய நாட்டைச் சேர்ந்த முதல் பெண் WWE வீராங்கனை ஷதியா பற்றித் தெரியுமா?!Sponsoredமுதன் முதலாக துயாயில் Light it Up என்று பொருள் தரக்கூடிய, வலூஹா (Wal3ooha) என்கிற பெயரில், மல்யுத்தப் போட்டி Wrestling match நடத்தத் திட்டமிட்டிருந்தது World Wrestling Entertainment - WWE. இதனை அரபியில் தொகுத்து வழங்குவதற்கான ஆடிஷனுக்குத் தான் வந்திருந்தார் 31 வயதான ஷதியா பிசேஷோ.

இதற்கு முன்பே, Nike, Porsehe மற்றும் பெப்சி நிறுவனங்களுக்குப் பல போட்டிகளை லைவ்வாக தொகுத்து வழங்கிய அனுபவங்களை வைத்திருந்த ஷதியா, மல்யுத்த வீரராக மாறுவார் என்று அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். அந்த நேர்காணலைச் செய்தவர்களும் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

Sponsored


”நான் ஒரு நல்ல விளையாட்டு வீரராக என்னால் முடிந்த அளவு இருக்க விரும்பினேன். அதன் மூலம் ஒரு நல்ல விளையாட்டு தொகுப்பாளராக இருப்பதற்கான க்ரெடிபிலிட்டி எனக்குக் கிடைக்கும் என்பதால். அது தான் என் மனதில் இருந்தது” என்கிறார்.

Sponsored


ஜீ ஜிட்சூ என்கிற பிரேசிலிய தற்காப்புக் கலையில் வல்லவரான இவரின் திறமையை கண்டுகொண்ட WWE, சிலர் மட்டுமே பங்கு பெறக்கூடிய போட்டியில் பங்கெடுக்க வாய்ப்பு கொடுக்க, அதில் சிறப்பாகச் செயல்பட்டு தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார். தற்போது WWE இல் விளையாட ஒப்பந்தமாகியதன் மூலம், அரபிய பின்னணி கொண்ட முதல் பெண் WWE வீரராக மாறியிருக்கிறார்.

"என்னால் எனது பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமையடைய வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களை ஒரு விளையாட்டு வீரராகவும், எண்டர்டெயினராகவும், WWE இல் விளையாடும் முதல் அரபைச் சேர்ந்த பெண்ணாகவும் பெருமையடைய வைக்க விரும்புகிறேன். அது பெரிய விஷயம் மற்றும் பெரிய பொறுப்பும் கூட” என்கிறார் ஷதியா.

pic courtesy: arab news

ஷதியா ஜோர்டன் தலைநகர் அம்மானைச் சேர்ந்தவர். லெபனானில் சிறிய வயதிலேயே வானொலியில் தன் கரியரைத் தொடங்கியவர், பெய்ருட் அமேரிக்க பல்கலைக்கழகத்தில், இளங்கலை வணிகம் படித்திருக்கிறார். படிப்பு முடிந்ததும், துபாயில் தொடர்ந்து வானொலியில் வேலை பார்த்து வந்தவர், SDB மீடியா என்கிற பெயரில் தன்னுடைய சொந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு நிகழ்வுகளை லைவ்வாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.

தற்போது, அமேரிக்காவின் ஃப்லோரிடாவில் இருக்கும் ஓர்லாண்டோவிற்கு குடிபெயர்ந்து, மல்யுத்த போட்டிகளுக்கான பயிற்சிகளைப் பெற்று வருகிறார்.

“ஷதியா விளையாட்டுத் திறமை, நம்பிக்கை, இயற்கையாகவே அமைந்திருக்கும் ஈர்ப்பு சக்தி, இரு மொழித் திறமை (ஆங்கிலம்-அரபி) ஆகியவைதான் அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது என்கின்றனர், WWE ஐச் சேர்ந்தவர்கள்.

ஷதியா மட்டுமல்ல, அவரது ஒரு தங்கை அரிஃபா, ஜோர்டன் பெண்கள் தேசிய பாக்சிங் டீமின் தலைவர். இன்னொரு தங்கை, ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்.

“ஷதியா கடுமையான உழைப்பாளி. அவள்தான் எங்கள் குடும்பத்தில் 15-16 வயதிலேயே வேலைக்குச் சென்றாள். நான் நிச்சயமாக அவள் பெரிய விஷயங்களைச் செய்வாள் என்று நினைத்தேன். அவள் எதனை எடுத்தாலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வாள்” என்கிறார் ஷதியாவின் மற்றொரு தங்கை ஜெஹான்.

ஷதியா, ”மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து WWE க்கான பாதை எப்போதுமே எளிமையானதாக இல்லை. அங்கு எந்த ட்ரை அவுட் சுற்றுகளும் இல்லை. அராபிய பின்னணியில் இருந்து வரும் வீரர்கள் அனைவருமே அமேரிக்காவிலோ அல்லது கனடாவிலோ பிறந்து வளர்ந்தவர்களாக இருப்பார்கள்” என்று சொன்னாலும், WWE நிறுவனம் எப்போது அரபியா பின்னணி கொண்டவர்களைத் தீவிரவாதிகளாகவே சித்தரிக்கும் வழக்கம் கொண்டது.

2005இல் இத்தாலிய-அமேரிக்க பின்னணி கொண்ட Mark Copani என்பவரது பெயரை முஹமது ஹாசன் என்கிற பெயரோடு, ’தீவிரவாதம்’ தீமில் ஷூட் செய்ய வைத்து, அதனை லண்டனில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற அன்று ஒளிபரப்பியது, மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்து, மார்க்கின் மொத்த கரியரும் நாசமாகியது தொடங்கி, WWE பல முறை, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமேரிக்க்காவின் தலையீடுகளும், குண்டு வெடிப்புகளும் பேசு பொருளாகியிருக்கும் நிலையில், அதனை வெவ்வேறு செய்திகளைக் கொண்டு திசை திருப்பவே இது போன்ற ஸ்டண்டுகளை அமேரிக்கா செய்கிறது என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி, ஷதியா வெற்றிபெறுவார் என்று நம்புவோம்.Trending Articles

Sponsored