`நோ பாலில் விக்கெட் விழுந்ததைக் கொண்டாடுகிறார்’ - அஃப்ரிடியை விளாசிய கௌதம் காம்பீர்காஷ்மீர் குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு, இந்தியக் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் பதிலளித்துள்ளார். 

Sponsored


இந்தியா - பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் சர்ச்சை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நீடித்து வருகிறது. இந்தநிலையில், காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி ட்விட்டரில் கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பதிவில், ``இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் வருத்தமளிக்கும் வகையிலும், அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுய உறுதி மற்றும் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்தி வருபவர்களின் குரலை ஒடுக்க அவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகளைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது’’ என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார். 

Sponsored


இதற்குப் பதிலளித்துள்ள இந்தியக் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர், ``நமது காஷ்மீர் தொடர்பாக ஷாகித் அஃப்ரிடி பேசியுள்ளது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கருத்துக் கூற என்ன இருக்கிறது?. அவர் ஐக்கிய நாடுகள் சபை (UN) குறித்துப் பேசுகிறார். அவரது அகராதியில் யு.என். என்பதற்கு அண்டர் நைண்டீன் (19 வயதிற்குட்பட்ட) என்பதே பொருள். ஊடகங்கள் இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அஃப்ரிடி நோ பாலில் விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடுகிறார்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.        
 

Sponsored
Trending Articles

Sponsored