ஐ.பி.எல் தொடக்க விழாவில் தமிழ்ப் பாடல்! களைகட்டிய 11-வது சீஸன்Sponsoredவண்ணமயமான நடன நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல்-லின் 11-வது சீசன் தொடங்கியது. 

ஐ.பி.எல் கிரிக்கெட் 11வது சீஸன் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழா நிகழ்ச்சி, பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் நடனத்துடன் தொடங்கியது. மேலும், இந்தத் தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்கள், இசைக் கலைஞர்கள் என பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். பிரபுதேவா நடனத்தின்போது தமிழ் பாடலும் ஒலிக்கப்பட்டது. 

Sponsored


இந்தி நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடனமாடினார்கள். முன்னதாக தமன்னா பாகுபலி பாடலுடன் அறிமுகமாக, கலக்கல் நடனத்தினால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 

Sponsored
Trending Articles

Sponsored